Posts

Showing posts from January, 2013

ஆங்கோர் காதல்..!

Image

ஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்..

Image

“அவனும் அவளும்“..

Image
“அவனும் அவளும்“ என்று ஆரம்பிக்கும்போதே கள்ளப்பார்வையும் காதலோ என்ற கேள்வியுமாய் அசட்டுச் சிரிப்புடன் ஆர்வமாய் பிரகாசிக்கிறாய்..!
அருகருகே நடந்து செல்பவர்களை உற்று நோக்கி கலிகாலம் என்று காரி உமிழ்கிறாய்..!
பயண நெரிசலில்கூட பக்கத்திலமர்வது பாவமென்று குறுக்கிக்கொள்கிறாய் உனக்கான யதார்த்தங்களை..!
ரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதைத்தாண்டி ஆணென்றும் பெண்ணென்றும் பாகுபடுத்திப் பாழாக்குகிறாய்..!
தனித்துவமென்றும் தனிமைப்படுத்தலென்றும் தற்பெருமைபேசியே தள்ளிவைத்துப் பழக்குகிறாய்..!
பலருடன் படுத்தெழுந்தாலும் “ஆண்“ என்ற ஜம்பத்தையும் நினைத்தாலே நடத்தை தவறிய “பெண்“ என்ற சமாளிப்பையும் கேட்டுக் கேட்டுப் பழகிய உனக்கு என்றுமே புரிவதில்லை பால் வேறுபாடில்லா தோழமையின் உறுதிப்பாடு..!
கழுத்துக்குக் கீழே குறிவைக்கும் உனக்கு கண்கள் மட்டும் பார்க்கும் நட்பின் நிலைப்பாடு என்றுமே புரிதலுக்கு உட்படாத புதிர்தான்..!
இச்சைக் குப்பைகள் குமிந்துகிடக்கும் உனக்கு என்றுமே பிடிபடப்போவதில்லை.. தாய்ப்பாலுக்கும் காமத்துப்பாலுக்குமான வித்தியாசங்கள்..!! . .

வன்புணர்வு.. வன்கொடுமை.. விருப்பப்பாடல்..!

Image
அதனைத் தவிர்த்தோஅல்லதுவேகமாகக் கடந்தோ சென்று விடலாம்..!
பிற வேலைகளை முடித்த அயர்ச்சியின் ஆசுவாசமாய், சராசரிக்கும் சற்றே சாதாரணமான சம்பவமாய் சஞ்சரிக்கலாம்..!
நட்புக்களின் அரட்டையிலும், காதலின் கொஞ்சல்களிலும் உறவுகளின் விருந்தோம்பலிலும், விருப்பங்களின் தேடல்களிலும் எங்கோ.. யாருக்கோ.. எப்பொழுதோவென அவை மறந்து, மறைந்து, மறத்து மரித்துப் போகலாம்..!
பொது அறிவின் பறைசாற்றலாய்.. கூட்ட நெரிசலின் பெருமை பீற்றலாய்.. கண்சிமிட்டும் நொடியில் காணாமல் போகலாம்..!
இல்லாத தைரியங்களும், பொய்யான மனசாட்சிகளும், மிகைப்படுத்தியே பழக்கப்பட்ட கற்புக்களும், கேவலமான சமாதானங்களும், இருத்தலை நிரூபித்துக்கொள்ளும்வரை வட்டத்திற்காய் உள்ளிழுத்துக்கொள்ளலாம்..!
பத்தோடு பதினொன்றாகப் பழக்கப்பட்டதற்குப்பின் வன்புணர்வென்றாலும் வன்கொடுமையென்றாலும் விளம்பரங்களின் விளம்பர இடைவேளையாய் விட்டகற்றிவிட்டு விருப்பப்பாடலுக்கு செவிசாய்ப்போம்..!! . .