Monday, 27 February 2012

உப்புமா.. (27.02.2012)


இன்னைக்கு ராசிப்பொண்ணுக்கு பிறந்தநாள். அவளோட கல்யாணத்துக்கப்புறம் வர்ற முதல் பிறந்தநாள்“ங்குறதால கொஞ்சம் ஸ்பெஷல். காலேலயே எல்லாரும் போன் பண்ணி வாழ்த்திட்டோம். எங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்“னு புலம்பினா.. அம்மா ஒரே பீலிங்க்ஸ் ஆஃப் இன்டியாவாயிட்டாங்க.. ஒரே அழுவாச்சி தான் போங்க.. ஹாப்பி பர்த்டே ராசிப்பொண்ணு..
**********************
நேத்து சன்-மியூசிக்“ல வெடி படத்துலயிருந்து “இப்படி மழையடித்தால்“ பாட்டு பார்த்தேன். அட.. அட.. என்னமா இருக்கு தெரியுமா??? விஷால், சமீராவோட டிரெஸ்ஸிங் இருக்கே.. கலக்கல் போங்க.. அதுலயும் அவங்க நடனம்குற பேர்ல ஏதோ ஆடுவாங்க பாருங்க... பாட்டு முழுக்க கண்ணுக்குள்ளயே நிக்குது.. யாருப்பா அந்த டான்ஸ் மாஸ்டரு??? சுத்திப்போடுங்கப்பா.. பாக்கியராஜ், பாண்டியராஜன், ராமராஜன் டான்ஸ் எல்லாம் போட்டி போடணும் போங்க... அப்படியொரு ஸ்டெப்ஸ்.. (பேசாம நாம கூட டான்ஸ் மாஸ்டர் ஆகிடலாம்போல.. கொடுமடா சாமி..)


***********************
விஜய் டிவில புதுசா “உங்களில் யார் அடுத்த அழுமூஞ்சி?னு நிகழ்ச்சி வைக்க சொல்லணும். சீரியல்ல தான் அழுது குவிக்குறாங்கனா, கேம் ஷோவுல அதுக்கு மேல அழுவுறாங்க.. செலக்ட் பண்ணினாலும் அழுவை.. ரிஜெக்ட் பண்ணினாலும் அழுவை.. கடுப்பா வருது.. அவங்க அழுகுறது மட்டுமில்லா தொகுத்து வழங்குறவங்க, ஜட்ஜ்கள்“னு எல்லாரையும் அழுக வச்சு.. நம்மளயும் கடுப்பேத்துறாங்க. அப்புறம் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா“ நிகழ்ச்சில ஜட்ஜா வர்ற, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரோட சட்டைக் கையை கொஞ்சமாவது இறக்கி வச்சு தைக்கலாம்ல.. கையப் பாத்தாலே ஏதோ திருமலை நாயக்கர் மஹால் தூண் மாதிரியிருக்கு. பாக்கவே அறுவறுப்பா இருக்குதுப்பா..
*************************
இன்னைக்கு காலேல பஸ்ல வந்துகிட்டு இருக்கும்போது எனக்குப் பின்னாடி ஒரு அம்மா, தன் நாலு வயசு மகளோடு உக்காந்துருந்தாங்க. திடீருனு என்னைய பார்த்து ஹே.. என்னம்மா நல்லாயிருக்கியா? எங்க இந்தப் பக்கம்? அம்மா நல்லாயிருக்காங்களா? அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தேன்.. உன்னைய பாக்க முடியல. சரி அம்மாவ விசாரிச்சேன்னு சொல்லிடும்மா“னு அடுக்கிகிட்டே போனாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியல.. அவங்க யாருனே தெரியல. கேக்கவும் தயக்கம். அசடு வழிஞ்சபடியே தலையாட்டி வச்சேன். ரொம்ப நேரம் யோசிச்சு யோசிச்சுப் பார்த்தென். ம்ஹூம்.. ஞாபகத்துக்கு வரவேயில்ல. இறங்கும்போது அவங்களப் பாத்து சம்பிரதாயமா “போயிட்டு வரேங்க“னு சொன்னேன். உடனே அவங்க ஸாரிம்மா.. நீ என் சொந்தக்காரப் பொண்ணு மாதிரியே இருந்த.. தப்பா நெனச்சுட்டேன்னு சொன்னாங்க.. (அடப்பாவிகளா.. இதுக்கா இவ்ளோ நேரம் மூளைய கசக்கிகிட்டேன்..) அவ்வ்வ்..
*****************
கொஞ்சம் வேலையிருக்குங்க.. அதுனாலதான் உப்புமா கிண்டிட்டேன்..
அடுத்த பதிவுல சந்திக்கிறேங்க...
.
.

Wednesday, 22 February 2012

மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..1.       இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்
2.       ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
3.       நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று.
4.       மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு.
5.       உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
6.       உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
7.       ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
8.       இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணு லியூக்கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
9.       இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
10.       மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
11.       ரெடினா என்பது விழித்திரை
12.       ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறிகுறி சுவை குறைந்து விடும்.
13.       ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேருமிடம்.
14.    கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
15.    மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
16.    ப்ளூரா என்பது நுரையீரல் உறை
17.    இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
18.    சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள்ளன.
19.    அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
20.    ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
21.    உடலில் 206 எலும்புகள் உள்ளன.
22.    பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகாலையும் இணைக்கும் எலும்பு
23.    மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொடை எலும்பு.
24.    மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
25.    மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
26.    முகத்தில் உள்ள எலும்புகள் 14.
27.    கைகளில் உள்ள எலும்புகள் 27.
28.    மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
29.    மூளையில் பெரிய பகுதி பெரு மூளை – செரிப்ரம் என்று அழைக்கப்படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபகம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறத.
30.    சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
31.    உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
32.    நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
33.    எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000 கோடி இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.
34.    மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
35.    மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
36.    பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
37.    நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
38.    30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
39.    குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
40.    ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
41.    சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
42.    இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
43.    இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
44.    உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
45.    ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
46.    குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
47.    உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
48.    உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
49.    மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
50.    உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
51.    ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
52.    வெஸ்டிபுலே – எனப்படுவது பற்கள், கன்னத்திற்கு இடைப்பட்ட பகுதி.
53.    சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கும் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியாகும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
54.    இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
55.    இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
56.    உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபிடெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என்றும் அழைக்கப்படுகிறது.
57.    மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
58.    நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
59.    கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
60.    ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
61.    ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
62.    எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.
63.    மனித உடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3 மில்லியன்களுக்கு மேல் உள்ளன.
64.    செரடோனின் – வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
65.    வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
66.    இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
67.    பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
68.    பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ்சுதல்.
69.    உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
70.    பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.
.
.

Wednesday, 15 February 2012

கிறுக்கல்களுக்கு வயது இரண்டு..நேத்து தான் கிறுக்க ஆரம்பிச்ச மாதிரியிருக்குது. ரெண்டு வருஷம் ஓடிருச்சு. (பதிவுகள படிச்சுட்டு எத்தன பேர் ஓடுனாங்கனு நாம அப்பாலிக்கா டீல் பண்ணிக்குவோம்.)
முதன் முதலா பதிவு எழுத ஆரம்பிச்சது இதே நாள்ல தான்.. நடுவுல ப்ளாக் தொலைஞ்சுபோய் மறுபடியும் (இரண்டாவதா) முதல் பதிவு“னு எழுதுனது வேற விஷயம். (அதுக்கு இன்னொரு நாள் பிறந்த நாள் கொண்டாடிக்கலாம். ஆனா ட்ரீட் எல்லாம் கேகப்படாது சொல்லிட்டேன்..)
என்னோட கிறுக்கல்களுக்கு தொடர்ந்து ஆதரவு (என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்...) குடுத்துகிட்டு இருக்குற எல்லாருக்கும் நன்றிங்க..
இனி எழுதப்போகிற கிறுக்கல்களைப் படிக்கப்போற நண்பர்களுக்கும் (அனுதாபங்கள் கலந்த) நன்றிகள்.. (யாருப்பா அது ஓடுறது???).
மறுபடியும் சொல்லிக்கிறேன்........
சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த
நன்றி.. நன்றி.. நன்றி..
மூணாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் அடுத்த கிறுக்கலில் சந்திக்கிறேங்க..
நன்றிகளுடன்
--------- இந்திரா
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...