Posts

Showing posts from November, 2011

மன்னிப்பு – கேட்போம் கொடுப்போம்..

Image
மன்னிப்பு – இந்த வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை. பெரிய பெரிய பிரச்சனைகளையும் சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டுவரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு. ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அத்தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது. “மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனுஷன்“ என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது. பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர் நண்பனாக, உறவினராக, காதலன்/காதலியாக, கணவன்/மனைவியாக இருந்தாலும், வாக்குவாதங்களில் இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இருப்பத…

செல்போன் பேச நடுரோடு சிறந்த இடமோ??? உதாரணப் புகைப்படம் இதோ..

Image
காலேல Staff Busக்கு வெய்ட் பண்ணிகிட்டு இருந்தேன். அப்ப, நடு ரோட்ல ஒருத்தர் வண்டில போய்கிட்டு இருந்தார்.. திடீருனு போன் வந்துச்சு போல.. அப்படியே வண்டிய நிறுத்திட்டு போன் பேசினார்.. பின்  எந்த ரியாக்சனும் இல்லாம கிளம்பிட்டாரு. (இடம்: மதுரை டிஸ்ட்ரிக்ட் கோர்ட் எதிரில், ட்ராபிக் போலீஸ் கண்முன் தான்)




இவரோட கடமை உணர்ச்சிய எப்படி பாராட்றதுனே தெரிலங்க..
.
(குறிப்பு : ரெண்டு பக்கமும் வாகனங்கள் போய்கிட்டும் வந்துகிட்டும் இருக்கு.. அந்த கேஸ் வண்டி அவரை கடக்கும்போது எடுத்த புகைப்படம்.. அதுனால வண்டி நிக்குற மாதிரி தெரியும். படத்துல, அவரை தவிர எல்லா வாகனங்களுமே ஓடிகிட்டு இருக்கு) . .

சில கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்..

Image

ச்சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள் - ஒரு அலசல்..

Image

150 மொக்கை போட்டாச்சு… (ஏதோ என்னால முடிஞ்ச இம்சை..)

Image

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்..

Image
1.குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள். 2.அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா“னு கேக்கும்போது, இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு. 3.உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்). 4.அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள். 5.இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்). 6.குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும். 7.பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் ந…