Friday, 29 April 2011

பல்பு வாங்குறதே எனக்குப் பொழப்பா போச்சு....
நா நேத்து ஆபீஸ் நேரத்துல, ரொம்ப சின்சியரா வேலை பாத்துகிட்டிருந்தேன். (ப்ளாக் பாத்துகிட்டிருந்தேன்னு உண்மைய சொல்ல மாட்டேனாக்கும்..)
சார் ஒரு ரிப்போட் ரெடி பண்ணனும், சாயந்திரத்துக்குள்ள ஹெட் ஆபீசுக்கு மெயில் அனுப்பனும்னு சொன்னார். நானும் வேக வேகமா டைப் பண்ணிகிட்டிருந்தேன். திடீருனு என் கம்ப்யூட்டர்ல இருந்த மவுஸ்.. மக்கர் பண்ண ஆரம்பிச்சது. க்ளிக் பண்ணினா தனியா செலக்ட் ஆகாம, மொத்தமா ஓபன் ஆகிகிட்டே இருந்துச்சு. சரி கீ-போர்ட்லயே முடிச்சிடலாம்னு பாத்தா அது அதுக்கு மேல.. Arrow பட்டன் அமுக்கினா தாறுமாறா செலக்ட் ஆகிகிட்டே இருந்துச்சு.
நானும் கம்ப்யூட்டர ஷட்-டவுன் பண்ணினேன், ரீ-ஸ்டார்ட் பண்ணினேன்.. மானிட்டர அமத்திட்டு ஆன் பண்ணினேன்.. கீபோர்ட் வயர கழட்டி மாட்டினேன்.. ம்ஹூம்.. ஒண்ணுமே வேலைக்கு ஆகல. சார் கிட்ட சொன்னேன். அவசரமான வேலை.. இன்னும் ஒரு மணி நேரத்துல முடிக்கணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்.
சரி அந்த ஃபைல காப்பி பண்ணி வேற சிஸ்டம்ல போடலாம்னாலும் முடியல. முக்கியமா இன்டர்நெட் ஓபன் பண்ணவே முடியல.. (நமக்கு அதுதானே முக்கியம்...) வேற வழியில்லாம சிஸ்டம் சர்வீஸ் பண்றவங்களுக்கு போன் பண்ணி சீக்கிரம் வர சொன்னேன்.
அவர் சாவகாசமா அரை மணி நேரம் கழிச்சு வந்தார். எனக்கு டென்சனாயிடுச்சு. அவசரம்னு சொன்னா இப்படிதான் நிதானமா வருவீங்களா??னு அவர்கிட்ட கோவமா பேசினேன். அப்புறம் பிரச்சனைய சொன்னேன். அவரும் செக் பண்ணிப் பாத்தாரு. மவுஸ்லயும் சரி, கீபோர்ட்லயும் சரி, ஃபைலயோ ட்ரைவயோ தனியா செலக்ட் பண்ணவே முடியல.. ரெண்டு நிமிசம் யோசிச்சவரு, டக்குனு என் பக்கம் திரும்பி மேடம், நீங்க முன்ன பின்ன கம்ப்யூட்டர்ல வேலை பாத்துருக்கீங்களா? புதுசா வேலைக்கு சேந்துருக்கீங்களா“னு கேட்டார்.
நாலு வருசமா கம்ப்யூட்டரோட தான் குப்பை கொட்டிகிட்டு இருக்கேன். ஆனா எதுக்கு அப்டி கேக்குறாருனு தெரியாம நா திருட்டு முழி முழிச்சிகிட்டே “ஏன் சார்“னு கேட்டேன். கீபோர்ட காட்டி Shift பட்டன பாத்தீங்களா?னு கேட்டார். அப்ப தான் கவனிச்சேன். Shift பட்டன் அமுங்கியே இருந்துச்சு. அதுனால தான் எல்லாமே செலக்ட் ஆகிட்டே இருந்துருக்கு. “அட ஆமா... நா இத கவனிக்கல சார்“னு கேனத்தனமா அவரப் பாத்து சிரிச்சேன்.
அவர் என்ன பாத்து “இதுக்கு எதுக்கு என்ன கூப்டீங்க?? இங்கயே கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது கேட்ருந்தா அவங்களே சொல்லிருப்பாங்க மேடம்“னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போயிட்டார். (இந்த அவமானம் உனக்குத் தேவையா....??). அமுங்கியிருந்த Shift பட்டன எடுத்துவிட்டதுக்கு அவருக்கு சர்விஸ் சார்ஜ் வேற...
என்ன பண்ணித் தொலைக்கிறது??? பல்பு வாங்குறதே எனக்குப் பொழப்பா போச்சு....
.
.

Tuesday, 26 April 2011

படிச்சு நொந்துகிட்டேன்பொறுக்கி:- சார், உங்களை பார்த்தோன ஒன்னுமே ஒடலை

கிறுக்கன்: ஏன்? என் பெயர் பந்த் இல்லையே

பொறுக்கி:- உங்க பெயரை பற்றி நான் கேட்கவே இல்லையே?

கிறுக்கன்: இல்ல, பந்த்'னா தான் எதுவுமே ஓடாது.. அதான்..

பொறுக்கி:- ஹி ஹி உண்மைக்குமே உங்களை பார்த்தோன ஒன்னுமே ஒடலை சார்

கிறுக்கன்: வேணும்னா ரெண்டு ஆட்டோ'வ கேப்'ல விட்டு ஒட விடுவோமா?

பொறுக்கி:- விட்டா, கெடா வெட்டி பொங்கல் வைப்பீங்க போலஓவர் பால் போட்டா, பாயாசத்துக்கு நல்லது இல்லை…..

கிறுக்கன்: அய்யோடா, சுடு தண்ணிர் வைக்கிறவன் எல்லாம் இப்போ பால் பாயாசம் ரேஞ்ச்'க்கு போயிட்டான்…. என்னத்த சொல்ல..

பொறுக்கி:- நீங்க ஒன்னுமே சொல்ல வேணாம் சார்…….சும்மா இருந்தீங்கனாலே போதும் :)

கிறுக்கன்: சும்மா இருக்கிறது'னா நான் வீட்லையே இருந்து இருப்பேன்'ல எதுக்கு வர சொன்ன?

பொறுக்கி:- கொஞ்சம் தனியா பேசனும் அதுதான்…….

கிறுக்கன்: தனியா பேசனும்னா பாத்ரூம் உள்ளே போய் வாஷ்பேசினோட பேசிக்க வேண்டியது தானே.. நான் எதுக்கு..

பொறுக்கி:- சார், என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா FM மாதிரி சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க...

கிறுக்கன்: ஏன் சொல்ல மாட்ட, முதல்'ல என்னை வர சொன்ன, அப்புறம் தனியா பேசனும்', இப்ப சம்பந்தம் கூட பேசனும்ங்கற….முதல்'ல ஒரு முடிவுக்கு வா பேசிக்கலாம்

பொறுக்கி:- சார், முதல்'யே எப்படி சார் முடிவு வரும்?

கிறுக்கன்: ஏன் வராதா?

பொறுக்கி:- கண்டிப்பா வராது, ஏன்னா முதல்'ல வந்தா முன்னுரை கடைசில வந்தா

கிறுக்கன்: கட்டுரையா?

பொறுக்கி:- இப்ப தெரியுது, எப்படி நீங்க பத்தாங் கிலாஸை கூட தாண்டலைனு.

கிறுக்கன்: ஏன் அந்த கட்டுரை'ல எழுதி இருக்காங்களா என்னை பற்றி?

பொறுக்கி:- அந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு? போடுறது மொக்கை அது என்னை தவிற வேற யாருக்குமே புரியாது….

கிறுக்கன்: ஸ்ஸஸஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடேய் நீ தனியா பேசுவியோ, இல்ல தண்ணிய போட்டுட்டு பேசுவியோ எனக்கு தெரியாது. நான் கிளம்புறேன் இப்போ..

பொறுக்கி:- பிரதர் கொஞ்சம் நேரம் லொட லொட'னு ஸ்டார்ட் பண்ணுன டாடா வேன் மாதிரி இல்லாம அமைதியா இருந்தீங்கனா.. நான் சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடுவேன்..

கிறுக்கன்: டேய், அவ்வளவு ஈசியா நீ சொல்லிட்டு போயிட முடியாது சொல்லிட்டேன்

பொறுக்கி:- நான் தானே சொல்லுறேனு சொன்னேன்? இப்போ நீங்க சொல்லிட்டேனு சொல்லுறீங்க?

கிறுக்கன்: எனக்கு குழப்பமா இருக்கா இல்லை நீ என்னை குழப்புறீயானே தெரிய மாட்டேங்குது

பொறுக்கி:- நீங்க குழம்பி இருக்கீங்க அதுதான்

கிறுக்கன்: ?????

பொறுக்கி:- கல்யாண வீட்டுல மூனாவது பந்திக்கு மேல சாம்பார் கேட்டா, எப்படி கரண்டி மட்டும் வாலி'ல இருந்து எட்டி பார்க்குமோ அதே மாதிரி, நான் உங்க கிட்ட எப்படி இருக்கீங்கனு கேட்டா நீங்க உங்க பாட்டிக்கு நாக்கு'ல சுளுக்குனு பதில் சொல்லிறீங்க.. விளங்குமா? …

கிறுக்கன்: பதஸ்டத்தை கொஞ்சம் லெஸ் பண்ணிக்கோ

பொறுக்கி:- ஒரு அவசரத்துக்கு உங்க கிட்ட பேச முடியுதா? அப்படியே பேசுனாலும் ஒரே அட்டம்ட்'ல புரிஞ்சிடுமா உங்களுக்கு? எப்படி சார் இப்படி ?

கிறுக்கன்: சரி சரி கொஞ்சம் சிரி.. எதுக்கு இவ்வளவு சீரீயஸ்? இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? சொல்ல வந்ததை சொல்லு

பொறுக்கி:- அப்பாடா.. கடைசியா ஒரு பிரேக் கொடுத்தீங்களே.. நன்றி. இதோ ஐந்து நிமிஷிசத்தில சொல்லிட்டு கிளம்பிடுறேன்……

கிறுக்கன்: பிரதர், நீங்க சொல்லிட்டு அவ்வளவு சுலபமா இங்க இருந்து கிளம்பிட முடியாது

பொறுக்கி:- ஏன் ??????

கிறுக்கன்: ஏன்னா இது உங்க வீடு, நான் தான் உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன்.. சோ, நீங்க சொல்லி முடிச்சோன, நான் தான் கிளம்பனும். நீங்க இல்லைபுரிஞ்சதா?????? நீங்க சொல்லிட்டு கிளம்பி போனா, நான் எங்க போறது?

பொறுக்கி:- முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி
துப்புங்கடா இந்த மொக்கைக்கு காரி……………கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

.

மொக்கைக்கு நன்றி கோபி...

http://pakkatamilan.blogspot.com/2009/08/blog-post.html

.

.

Related Posts Plugin for WordPress, Blogger...