Friday, 22 October 2010

சந்தோசமா சரக்கடிங்க..டேய் மாமா.. மனசே சரியில்லடா.. சரக்கடிக்கலாம் வறியா??
பெரும்பாலும் ஆண்கள் குழுமியுள்ள வட்டங்களில் கேட்கப்படும் வசனம் இது. ஏதோ டீ குடிக்கலாம் வா“னு சொல்வது போல தண்ணியடிக்கலாம் வா“னு கூப்பிட்றது இப்போ ஃபேசனாகிப் போய்டுச்சு.
என்ன??? முறைக்கிறீங்களா??? ஏதோ அட்வைஸ் பண்ணப்போறேனு முகத்தை சுழிக்காதீங்க.. நான் அதெல்லாம் பண்ணல. அப்படியே பண்ணினாலும் அத யாரும் படிக்கப்போறதுமில்ல.. ஏன்னா உலகத்துலயே சுலபமான விசயம் அட்வைஸ் பண்றதுனும் கஷ்டமான விசயம் அந்த அட்வைஸ கேட்டு நடக்குறதும்னும் எனக்குத் தெரியும்.
எந்த விசயத்தப் பத்தி பேசுறதுக்கும் ஒரு அனுபவம் வேணும்னு சொல்வாங்க. ஆனா அது எல்லாத்துக்கும் பொருந்தாது. பத்தாவது மாடியில இருந்து குதிச்சா என்ன ஆகும்கு சொல்றதுக்கு, அப்டி குதிச்ச அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்ல. என்ன நா சொல்றது??
சரி இப்ப என்ன சொல்ல வறேனு கேக்குறீங்களா??
சரக்கடிக்கிறவங்க எல்லாரும் சந்தோசமா சரக்கடிங்க..
அட ஆமாங்க..
எல்லாருக்குமே குடிக்கிறதுக்கு நிச்சயமா ஒரு காரணம் இருக்கும். நண்பர்கள் ட்ரீட், பார்ட்டி காதல் தோல்வி, குடும்ப பாரம், மன அழுத்தம், பண்டிகை, குடித்துப் பார்க்கும் ஆர்வம்,...
இப்டி ஏதாவது ஒரு காரணம் கட்டாயமா இருக்கும். நீங்க தேவையில்லாம குடிக்கிறதில்லையே.. ஏன்னா நீங்க ரொம்ம்ம்ப நல்லவங்க..


ரொம்ப நாளைக்கப்பறம் நண்பர்கள் சந்தித்திச்சுகிட்டா அவங்க முதல்ல போற இடம் பார் தான். ஏன்னா அங்க தான மனசு விட்டு சந்தோசமா பேச முடியும். வீட்லயோ, பார்க்லயோ இல்ல வேற இடங்கள்ளயோ பேசினா உங்களுக்கு பேசின மாதிரியே இருக்காதே.. அதுனால அதுவும் சரிதான்.
இதுல இப்ப என்ன புதுசுனா நண்பர்கள் எல்லாம் சேந்து பீர் அடிக்கப் பழகிக்கிறது. என்னடானு கேட்டா அது சரக்கு லிஸ்ட்ல வராதாம். அதுனால அது கெட்ட பழக்கமில்லையாம். அதுலயும் பார்“க்கு போய் தண்ணியடிச்சாதான் தப்பாம். ரூம்கு வாங்கிட்டு வந்து அடிச்சா தப்பில்லையாம். அட அட என்ன ஒரு லாஜிக். செலவுக்கு காசு இருக்காது.. ஆனா சரக்கடிக்க மட்டும் எங்கிட்டு இருந்துதான் பெரட்டுவாங்களோ தெரியாது.. அதுல நீங்க கில்லாடி.. இதுக்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.


மற்ற விசயத்துல எப்படியோ. காதல் விசயத்துல சொல்லவே வேணாம்.. அதுல ஜெயிச்சுட்டா தண்ணி பார்ட்டி தான்.. தோத்துட்டா நண்பர்களுக்கு வாங்கித் தருவதையும் சேத்து தானே குடிச்சிட்டு அழுது புலம்புறது.. வெற்றி தோல்விங்கிறத தாண்டி அதுல சின்னதா சண்டை வந்தா கூட உடனே சரக்கடிச்சிட வேண்டியது. ஏன்னா அது தெய்வீக காதலாச்சே.. தண்ணியடிச்சு புலம்புறதுல தான நம்மலோட ஆழமான காதல அடுத்தவங்களுக்கோ இல்ல தனக்கேவோ புரிய வைக்க முடியும். அதுனால இதுல ஒண்ணும் தப்பில்ல..
அடுத்து கல்யாண பார்ட்டி.. கேட்டா பேச்சுலர் பார்ட்டியாம். நண்பர்களுக்காகவாம். அதுவும் கரெக்ட் தான். நட்பு இல்லையா.. நண்பன் இல்லையா.. செஞ்சு தான் ஆகணும். அப்டி பார்ட்டி வைக்கலேனா அது நட்பே இல்ல போல.. அவங்களோட நட்பு எந்த அளவு உண்மையானதுனு காட்றதுக்கு அவங்களுக்கு இத தவிர வேற வழியில்லையோ என்னவோ..?
அப்புறம் வாரத்திற்கு ஒரு தடவைனு வீட்ல அனுமதி வாங்கி குடிக்கிறது. அட ஆமாம்பா.. டெய்லி குடிக்கிறதுக்கு பதிலா, ஆறு நாள் கட்டுப்படுத்தி ஏழாவது நாள் மொத்தமா குடிக்கிறது எவ்ளோ பெரிய தியாகம்... ஒரு தியாகியா நீங்க அங்க நிக்கிறீங்க.. (எங்கனு கேக்காதீங்க)


அப்புறம் ஏதோ திராட்சை ரசமாம்.. அதாங்க வொய்னு. அது என்னவோ ஜூஸ் மாதிரியாம்.. உடம்புக்கு ரொம்ப சத்தாம், அதுனால தப்பில்லையாம். அதுக“கு நேரடியா திராட்சைய தின்னு தொலையலாமேனு கேட்டா, அதுல எஃபெக்ட் இல்லையாம். நியாயம் தானங்க.
உக்காந்து பேசுனா, ஒரு மணி நேரத்துல பிரச்சனை முடிஞ்சிடும். ஆனா செய்யமாட்டாங்க. ஒரு நாள் பூராவும் தண்ணிய போட்டுட்டு மப்புல திரிவாங்க. ஏண்டானு கேட்டா ஃபீல் பண்றாங்களாம்.. அது நமக்குப் புரியாதாம். ஆமாங்குறீங்களா?? ரைட்டு விடுங்க.
ஒரு சிலர் இருக்காங்க.. போர் அடிக்கிது அதுனால தண்ணியடிக்கிறேனு சொல்வாங்க. சரி சத்தமில்லாம போய்த் தூங்குங்கடானா, சலம்பல குடுத்தே சாவடிப்பாங்க. தூக்கிப் போட்டு நாலு மிதி மிதிக்கணும்னு நமக்குத் தோணவே தோணாது.
இதுலயும் சிலர், கௌரவத்துக்காகவும் பிசினஸ்க்காகவும் அப்புறம் ஃப்ரெண்ஸ் வற்புறுத்துனதாலயும் லைட்டா ஒரு பெக் போட்டேனு சொல்வாங்க. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் குடிக்கும் போது நா மட்டும் குடிக்கலேனா தப்பா நெனப்பாங்கனு காரணம் சொல்வாங்க. (ஆஹா என்ன ஒரு ஃப்ரெண்ட்ஷிப்??) அவங்க எல்லாம் குடிகாரங்க வகைல இல்லாயாம். ஒரு பெக்குல ஆல்கஹால் இருக்காதோ என்னவோ?
இவங்க மப்புல புலம்புறத கேட்டுக்கேட்டே, இம்சை தாங்க முடியாம, கூட இருக்குறவங்க தண்ணியடிக்க ஆரம்பிச்சு ஃபுல் டைட்டாயிட்றாங்க. ஏதோ இவங்களால முடிஞ்ச ஒரு சமூக சேவை.


சரி ஏண்டா குடிச்சு உடம்ப கெடுத்துக்குற? அந்தக் கருமத்தை விட்டுத் தொலைக்கலாம்ல?“னு கேட்டா நாங்க ஒண்ணும் அதுக்கு அடிமையாகல. ஜஸ்ட் ஒரு ரிலாக்சேசன்அப்டினு சொல்வாங்க. ஓங்கி நாலு அறை விடலாம்னு நமக்குத் தோணவே கூடாது. ஏன்னா இவங்க ரொம்ம்ம்ம்ப நல்லவங்க.
தண்ணியடிச்சா பிரச்சனை தீராது, கொஞ்ச நேரம் மறக்கலாம் அவ்ளோதான். ஆனா நமக்கு அது தானே முக்கியம்.
அடுத்தவங்க எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்ன? எவ்ளோ கேவலமா நம்மள நெனச்சாலும் பரவாயில்ல. நம்ம உடம்ப பத்தி நமக்கே கவலையில்லாதப்ப அவங்க யாரு நம்மள கேள்வி கேக்க? நம்மள நம்பியிருக்குறவங்க அழுதாலோ வருத்தப்பட்டாலோ நாம கண்டுக்கலாமா? நம்ம சுயநலம் தான் நமக்கு முக்கியம்.
அதுனால மறுபடியும் சொல்றேன்.
சரக்கடிக்கிறவங்க எல்லாரும் சந்ந்ந்ந்ந்ந்தோஷமா சரக்கடிங்க.
.
.

Tuesday, 12 October 2010

யாரோ க்ளிக்கியது..

மின்னஞ்சலில் எனக்கு வந்த சில புகைப்படங்கள் இவை.

உங்களுக்கு எந்த போட்டோ புடிச்சிருந்தது??

(கடைசி போட்டோனு சொல்வீங்களே..)
.

Thursday, 7 October 2010

"அந்த ஆளு ஒண்ணுக்குப் போயிட்டாரு.."அன்புள்ள ஹேமாவுக்கு,

எப்படி எழுதுவேன்? முதன் முறையாக ஒரு கடிதம் எழுதுகையில் என் கைகள் நடுங்குகின்றன. இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ள என் இதயத்திற்கு வலுவில்லை. சமூகத்தில் ஒரு தனிமனிதனின் பலவீனத்தை இப்போதுதான் ஆழமாய் உணர்கிறேன்.
.
ஒருசில நாட்களே பழகிய ஒருவர் வீட்டுத் திருமணத்திற்கு, விருப்பமாய்ப் போய் விருந்து சாப்பிட்டு “மொய்“ எழுதிய போதெல்லாம் பக்கத்திலிருந்த நீ, ஒரு குழந்தையின் அழுகையைத் துடைக்க வேண்டிய நேரத்தில் தூரத்திலிருக்கிறாய்.
.
அம்புஜத்தின் மகள் கண்ணம்மாக் குட்டியைப் பற்றி சென்ற கடிதத்தில் விசாரித்திருந்தாய். கடிதத்தில் நீ காட்டிய கரிசனம், கண்களில் கண்ணீர்த்துளிகளாய் தளும்புகிறது.
.
ஒரு முறை சமையலறையில் உன் சேலை முனையில் தீப்பிடித்துக்கொள்ள, ஓடிப்போய் செம்புத் தண்ணீரை ஊற்றி அணைத்தாளே.. நம் பையன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, லாரி ஒன்று விரைந்து வர, ஒரே பாய்ச்சலில் குழந்தையை தூக்கி வந்தாளே.. என்ன சாதுர்யம் என்று எத்தனையோ நாட்கள் ஆச்சர்யப்பட்டுப் பேசியிருக்கிறோம்.
.
அவளுக்கு நேர்ந்ததை எழுதினால் ஒரு குறை அழுதாலும் அழுதுவிடுவாய். அவள் அம்மாவின் முகத்தில் சுரத்தே இல்லாமல் போய்விட்டது. நம் வீட்டுப் பத்துப் பாத்திரம் தேய்க்கும்போது அழுது கொண்டேயிருக்கிறாள்.
.
கண்ணம்மாகுட்டி மிரள மிரள பார்க்கிறாள். அதிர்ச்சியாயிருக்கிறது ஹேமா. அவள் எதுவுமே பேசவில்லை. எப்போதும் துறுதுறுவென்று இருந்தவள் எப்படியோ மாறிப்போய்விட்டாள். டியூசனில் கூட எல்லோருக்கும் முன்னாடி கணக்குப் போட்டு முடிப்பாளே!! இப்போது பேயறைந்து உட்கார்ந்துவிட்டாள்.
.
ஆதரவற்றோருக்காக நடத்தப்படும் அனாதை இல்லத்தில் ஒரு காமவெறியனுக்கு, குழந்தை கண்ணம்மா குட்டி பலியாகியிருக்கிறது. அந்த வடு நீங்குவதற்கு அவள் இன்னும் எத்தனை வருடங்கள் கடக்க வேண்டியிருக்குமோ? வடு என்பது நீங்கக் கூடியதுதானா?
.
நேற்று அம்புஜத்திடம் சொல்லி கண்ணம்மாகுட்டியை வீட்டுக்குக் கூட்டி வரச் சொன்னேன். ஆறுதலுக்காக அவள் தலையைக் கோதிவட நெருங்குகையில் சடாரென ஒதுங்கிக்கொண்டாள். அவளின் கண்களில் தெரிந்த மிரட்சி என்னை அதிர வைத்துவிட்டது. அதில் ஒரு வக்கிரம் பிடித்தவனின் மிருகவாடை அடிக்கிறது.
.
ஒரு மிருகம், சட்டென அவள் மீது பாய்ந்து எகிறிப்போனால் அவளால் எப்படிப் பேச முடியும்? ஒரு மொழியைத் தோற்கடிக்கும் அந்த தருணத்தில், சோகத்தின் ஒட்டு மொத்தமாய் அவள் வாயிலிருந்து வெளிவந்திருக்கும் ஒற்றை வார்த்தை “அம்மா“. ஆனால் அம்புஜம் போன்ற அம்மாக்களால் கண்ணம்மாக்குட்டிகளை காப்பாற்ற முடியுமா என்ன?
.
ஒரு பெண்ணுக்கு நேரக்கூடாத இந்த மாபெரும் சோகத்தை மானம் போய்விடும் என்று மறைக்கப் பார்க்கிறாள் அவளின் அம்மா அம்புஜம். இந்த பாழாய்ப்போன சமூகம் அவர்களை எப்படிப் பழக்கி வைத்திருக்கிறது பார்த்தாயா?
.
வெளியில் தெரியாதபடிக்கு ஒரு விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. கண்ணம்மாகுட்டி சொன்ன பதிலை அம்புஜம் என்னிடம் சொன்னபோது நான் உறைந்து போனேன்.
.
கண்ணம்மாகுட்டி, விசாரித்தவர்களிடம் சொன்ன பதில் இதுதான்.
”அந்த ஆளு என்மேல ஒண்ணுக்குப் போயிட்டாரு”
.
சகல சாட்சியங்களையும் தவிடுபொடியாக்கிவிடும் நம்மூர் நீதிமன்றங்களில், கண்ணம்மாகுட்டி அந்த காமந்தகன் பற்றி சொன்ன குற்றப்பத்திரிகை இம்மட்டும்தான்!
.
பலியாகிப் போனவளின் குழந்தைதனத்தை, குற்றவாளி சாதகமாக்கித் தப்பித்துக்கொண்டான். சட்டம் வெறும் தடித்த புத்தகமாகவே காட்சி தருகிறது. இனியென்ன எழுத?
.
ஹேமா.. உடனடியாய் வா. கண்ணம்மாகுட்டியின் மன உலகம் சிதைந்து கிடக்கிறது.
.
இப்படிக்கு
உன் வரவை எதிர்நோக்கும்
உன் அன்புக் கணவன்
அருள்
.
(அருள் என்பவர் எழுதிய ”மற்றவை நேரில்” என்ற புத்தகத்திலிருந்து என்னை பாதித்த கடிதம் இது)
.

Tuesday, 5 October 2010

இதெப்படி இருக்கு???


ரெண்டு நாளைக்கு முன்னாடி என் சொந்தக்காரர் ஒருத்தர் வீட்டு கிரஹப்பிரவேசத்துக்குப் (அதாங்க.. புது வீடு பால் காய்ச்சினதுக்கு) போயிருந்தேன். அங்க நிறைய பேர் வந்திருந்தாங்க. பால் காய்ச்சி சாமி எல்லாம் கும்புட்டுட்டாங்க. என்னென்னவோ சாஸ்த்திரமெல்லாம் பண்ணினாங்க. வீட்டுக்கு சொந்தக்காரர் தன்னோட புது வீட்டப் பத்தி வந்திருந்த எல்லார்கிட்டயும் ரொம்பப் பெருமையா பேசிகிட்டு இருந்தாரு. மார்பில்ஸ் போட்டதிலருந்து கதவு, ஜன்னல் செஞ்சது வரைக்கும் எல்லாமே மாடர்னா பண்ணிருக்குறதா சொல்லிகிட்டு இருந்தாரு. வெளிநாட்டு ஸ்டைல்ல ப்ளான் பண்ணி கட்டினதா பேசிகிட்டு இருந்தாரு. கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாருக்கும் பந்தி போட்டாங்க, நாங்களும் சாப்பிட்டோம். (அதுக்கு தான வந்ததே..) அப்புறம் மொய் எழுதினோம். (எம்புட்டுனு கேக்காதீங்க.)

திடீருனு அங்க இருந்த ஒரு பெரியவர், வீட்டு உரிமையாளர் கிட்ட போயி ”எனக்கு வவுத்த கலக்குதுப்பா, பாத்ரூம் எங்க இருக்கு”னு கேட்டாரு. அவரும் பாத்ரூமுக்கு கூட்டிட்டு போனார். வெஸ்டர்ன் டைப்னால எனென்ன பண்ணனும்னும் சொல்லி அனுப்பிட்டு வந்து, மறுபடியும் பெருமை பேச ஆரம்பிச்சாரு. ”பாத்ரூம்ல ரொம்பவே காஸ்ட்லியான டைல்ஸ் பதிச்சிருக்கோம், ஷவர், பாத் டப் எல்லாமே அழகா அமைச்சிருக்கோம், வெஸ்ட்டர்ன் டாய்லட் போட்ருக்கோம். ரொம்பவே மாடலா இருக்கு” அப்டி இப்டினு ஓவரா பீத்திகிட்டு இருந்தாரு.

கொஞ்ச நேரம் கழிச்சு அந்தப் பெரியவர் வெளிய வந்தாரு. நேரா வீட்டு ஓனர்கிட்ட போயி, ”ஏம்பா.. எல்லாமே நல்லா தான் இருக்கு, கழுவுறதுக்கு எந்த சுட்ச் போடணும்னு தெரியலயே”னு அப்பாவியா சொன்னாரு. டாய்லட் வெஸ்டர்னா இருக்குறத பாத்துட்டு அதுல உட்கார்ந்ததும் தண்ணியோட சேந்து உள்ள இருந்து ஏதோ கை மாதிரி மெஷின் வந்து கழுவிவிடும்னு நெனச்சிட்டாராம்.. இதெப்படி இருக்கு.

முன்ன பின்ன அவரு வெஸ்ட்டர்ன் டாய்லட் பாத்ததே இல்லாயாம்.. அதுனால கழுவுறதுலயும் ஏதாவது நவீனம் வந்திருக்குமோனு நெனச்சிட்டாரு. அவருக்கு ஒரு வழியா வௌக்கம் சொல்லி புரியவைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ”அட என்னப்பா பாத்ரூம் கட்டியிருக்க?? மனசுக்கு ஒரு நெறைவாவே இல்ல.. வீட்டுக்குப் போயி நல்லா “போகணும்”னு சொல்லிட்டு கௌம்பிட்டாரு. அவருக்கு வழக்கமான டாய்லெட்ல போற வசதி இதுல இல்லையாம்.

இப்ப என்னதான் சொல்ல வற்றனு கேக்குறீங்களா??

என்னதான் நாம நவீனமா மாறிட்டாலும் ஒரு சில “அடிப்படை“ விஷயங்கள மாத்த முடியாது. (ஹிஹி)

ஹும்.. எப்புடியெல்லாம் பதிவு போட்டு சமாளிக்க வேண்டியிருக்கு..
.
Related Posts Plugin for WordPress, Blogger...